CM விஜயுடனான விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கினார் சங்கீதா

முதலமைச்சர் விஜய் உடனான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். இதுகுறித்தான விசாரணை இன்று (ஆக.7) நடைபெற்றது. இதில், காணொலி வழியே ஆஜரான சங்கீதா சுமார் 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன்வைத்துள்ளார். அடுத்த விசாரணைக்கான தேதி இன்று மாலை தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕