இந்தியாவில் விற்கப்படும் புதிய ஸ்மார்ட் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி தனியுரிமை கொள்கைக்கு எதிரானது என்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதை ஏற்றால் தங்கள் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என கருதி ஆப்பிள் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.