“பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?” என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, “குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது நினைத்ததை விட மிகவும் கடினமாக உள்ளது; நல்ல பெயர்களை பரிந்துரையுங்கள்” என நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும், கர்ப்ப காலத்தில் இதுவரை 11 கிலோ எடை அதிகரித்துள்ளதாகவும், தாய்மைப் பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் அளித்துள்ளதாகவும் கூறினார்.