உப்புமா என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எப்போதும் ஒரு பீதி இருந்து கொண்டே இருக்கும். அப்படி அமெரிக்காவின் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள "பெரிதும் வெறுக்கப்படும் இந்திய உணவு பட்டியலில் உப்புமா 10ஆவது இடம் பெற்றுள்ளது. முதல் இடத்தில் ஜல்ஜீராவும், மூன்றாவது இடத்தில் தேங்காய் சாதமும், ஏழாவது இடத்தில் அச்சப்பமும் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான இந்திய குடும்பங்களில் காலை மற்றும் இரவு உணவாக பலவிதமான உப்புமாக்கள் சமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.