சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது25) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.