காரிப்பட்டி அருகில் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்த சேகர் (59) என்பவர் தனது வீட்டின் வெளியே சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போனை திருடியதாக கார்த்திக் (23) என்பவரை காரிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அயோத்தியாப்பட்டணம் தாதனூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.