சேலத்தில் இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சேலம் சூரமங்கலம் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், தனது மனைவி நிவேதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போனது குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று வேலை முடிந்து வீடு திரும்பியபோது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணாத பெருமாள், உறவினர்கள் வீடுகளிலும் தேடியுள்ளார். கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் குழந்தைகளுடன் மாயமான இளம் பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி