ஏற்காடு கோடை விழாவில் அண்ணா பூங்கா மலர் கண்காட்சியில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கற்பனை தேவதை, பரதநாட்டிய மங்கைகள், புளூட்டோ, கூபி போன்ற கார்ட்டூன் வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, 28-ந்தேதி வரை நடைபெறவிருந்த மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.