கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் உயிரியல் பூங்காவிற்கு 21 ஆயிரத்து 899 பெரியவர்கள், 5 ஆயிரத்து 861 சிறுவர்கள் என 27 ஆயிரத்து 760 பேர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வந்து பார்வையிட்டனர். இதன் மூலம் கட்டணமாக ரூ. 14 லட்சத்து 46 ஆயிரத்து 590 வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 12 லட்சம் வசூலானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பேர் வந்துள்ளனர்.