பின்னர் பட்டாசுகளை குடோனில் அடுக்க கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு குடோன் தரைமட்டமானது. இதில் தீயில் கருகி ஜெயராமன் உயிரிழந்தார். காயம் அடைந்த முத்துராஜா, சுரேஷ்குமார் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து குப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.