சேலம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சேலம் அடுத்த அயோத்தியா பட்டணம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு 8 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ராஜேந்திரனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக ராஜேந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி