இதன் காரணமாக பொதுமக்கள், கடைக்காரர்கள் அவதிக்குள்ளானார்கள். சுமார் அரை மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி குழந்தைகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மழை நின்ற பின்பு ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். கடும் பனிமூட்டம் நிலவியதால் ஏற்காடு ஏரி பனி படலமாக காட்சியளித்தது. இதை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர். ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.