மேலும் அவர்கள் குகைகோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏற்காட்டில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்பட்டது. மேலும் படகு இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மதிய நேரத்தில் ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் உள்ள உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.மேலும் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய முறைகள்