ஏற்காட்டில் கோடை விடுமுறையை ஒட்டி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஏற்காடு வந்து, படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். அண்ணா பூங்காவில் மலர் செடிகள், பசுமை புல்வெளிகளில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடாபாயிண்ட் உள்ளிட்ட காட்சி முனைகளில் இருந்து மலைகளின் அழகையும், சேலம் மாநகரின் காட்சியையும் கண்டு ரசித்தனர்.