அயோத்தியாப்பட்டணம் அருகே செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோபாலகிருஷ்ணன்(32) மற்றும் அவரது மனைவி ரேகா(29) இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக ரேகா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று மதியம் ரேகா தனது குழந்தைகள் மற்றும் தாயார் கருப்பாயியுடன் மின்னாம்பள்ளிக்கு வந்தபோது, கோபாலகிருஷ்ணனுக்கும் ரேகா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் அரிவாளால் கருப்பாயியை வெட்டினார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.