ஏற்காட்டில் அதிகாலை முதலே கடும் பனி மூட்டம்

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெளியின் தாக்கம் அதாகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.4) மாலை இடியுடன்‌ கூடிய கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் சாரல்‌ மழையாக பெய்து வந்தது. தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

அவர்களுக்கு வரப்பிரசாதமாக இரவு முழுவதும் பெய்த கனவிலே காரணமாகவும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதி முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இந்த பனி மூட்டத்தை வெகுவாக ரசித்தனர். பனி மூட்டததில் நடந்து சென்று புகைப்படம் எடுத்து கொண்டனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சாலைகளில் சென்றன. பொதுவாக இந்த பனி மூட்டம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி