இதில், தலைமைக் கழக பேச்சாளர் தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும், குறிப்பாக, மருத்துவம், கல்வி, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்களின் நலனுக்கான செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சி அவைத்தலைவர், மாவட்டச் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.