சேலம்: எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரை

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொங்கல் விழாவில் நானும் ஒரு விவசாயியாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2026 ஆம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025 ஆம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருதை பெற்றோம். கவர்ச்சிகரமான வாக்குறுதி கொடுத்து, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த திமுக கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக எதுவும் செய்யவில்லை. 

திமுக ஆட்சிகள் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களது வீட்டு மக்களுக்கு தான் நன்மை கிடைத்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம். அதனால் அதிமுகவிற்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் திறக்காத திமுக அரசு நான் இன்றைய தினம் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்திற்காக நேற்றைய தினம் திறந்து உள்ளனர். அதிமுக அரசு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம் அதை திமுக அரசு முடக்கிவிட்டது.

தொடர்புடைய செய்தி