வாழப்பாடி: தொழிலில் நஷ்டம் அடைந்ததால் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை

வாழப்பாடி ஏரிப்புதூரைச் சேர்ந்த ராஜேந்திரனின் இளைய மகன் மணிரத்தினம் (35), சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். தந்தையிடமும் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மணிரத்தினம் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காரிப்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி