சேலம் வாழப்பாடி புதுப்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கனகா(38) என்பவர், தனது மகள் தரணி(15)யுடன் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சேசன்சாவடி அருகே பின்னால் வந்த கார் ஒன்று மொபட்டின் மீது மோதியதில், கனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தரணி காயமடைந்துள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயரச் சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.