ஏற்காட்டில் தங்கும் விடுதியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைது

ஏற்காடு பக்கோடா பாயிண்ட் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏற்காடு போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு அனுமதியின்றி மது விற்றதாக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி