தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

சேலம் இரும்பாலை மதுவிலக்கு போலீசார், வாழப்பாடி அருகே சேஷன்சாவடி பகுதியில் சேகர் (54) என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி