கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). லாரி டிரைவர். இவர் காரிப்பட்டி அடுத்த கருமாபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டலாம்பட்டியை சேர்ந்த கார்த்தி (31) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, மணிகண்டனிடம் செல்போன், ரூ. 3 ஆயிரம் மற்றும் ஏ. டி. எம். கார்டு ஆகியவற்றை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்த்தியை கைது செய்தனர்.