வாழப்பாடி: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து செவிலியரை தாக்கியவர் கைது

வாழப்பாடி செல்லியம்மன் நகரைச் சேர்ந்த செவிலியர் சத்யா (39), கடந்த 8 ஆண்டுகளாக சுரேஷ் (43) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். சத்யாவின் அண்ணன் வேல்முருகனுக்கும் சுரேஷுக்கும் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, பின்னர் சத்யா தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் ஆஸ்பத்திரிக்குச் சென்ற சுரேஷ், அங்கு சத்யாவின் உடையைப் பிடித்து இழுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வாழப்பாடி போலீஸார் சுரேஷை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி