சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி தனலட்சுமிக்கு, தங்கராஜ் என்பவர் 2012ல் 30 கிலோ வெள்ளி வாங்கி, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று காசோலைகளை கொடுத்துள்ளார். வங்கியில் செலுத்தியபோது கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் திரும்ப வந்துள்ளன. பணத்தை தராமல் காலம் தாழ்த்திய தங்கராஜை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அன்னதானப்பட்டி போலீசார் அவரை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.