சேலத்தில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மத்திய சிறை பின்புறம் நேதாஜி நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் சசிகுமார் (40) நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அஸ்தம்பட்டி போலீசார், சசிகுமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சசிகுமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி