எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 433 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டி. எம். செல்வகணபதி எம். பி. மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மடிக்கணினியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.