சேலம் அருகே மேட்டுப்பட்டி தாதனூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து பூட்டப்பட்ட நிலையில், மறுநாள் காலை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளப் பணமான ரூ. 80 ஆயிரம், செயலாளரின் ஒரு பவுன் நகை மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் திருடு போனது. காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களைத் தேடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.