அப்போது வாழப்பாடி அருகே சேசன்சாவடி பஸ் நிறுத்த பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றனர். அந்த நேரம் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முருகன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாழப்பாடி போலீசார் முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த பொன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் லாரி டிரைவரான கோவை புளியங்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் (50) மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.