கடும் பனிப்பொழிவால் ஏற்காடு காஷ்மீராக மாறி காட்சி அளிக்கிறது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. அடர் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்ல வேண்டியிருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காணப்பட்டது. மதியத்திற்குப் பிறகு வெயில், குளிர் மற்றும் பனிமூட்டம் என மாறி மாறி நிலவியது. காஷ்மீர் போன்ற பனிமூட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம் அளித்தது.

தொடர்புடைய செய்தி