மேலும் மலை பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வந்து சென்றன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கடும் புகை பணி நிலவி வருகிறது மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த புகை பணி மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலான பொது மக்கள் இந்த புகை பணி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இன்று காலையும் கடும் புகை பணி நிலவியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். மேலும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு