ஏற்காட்டில் நேற்று அடர்ந்த பனிமூட்டம் படர்ந்ததால், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாகச் சென்றனர். சாரல் மழையும், குளிர்ச்சியான சூழலும் அவர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது. வார விடுமுறையையொட்டி வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த ரம்மியமான சூழலை செல்போன்களில் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். பனிமூட்டம் காரணமாக மாலை நேரத்தில் படகு சவாரியில் சிரமம் ஏற்பட்டது.