சேலம்: மாரியம்மன் கோயில் அருகே புதிய சாலைக்கு பூமி பூஜை

சேலம் மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே புதிய காங்கிரஸ் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. அத்தொகுதி எம்எல்ஏ அருள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பணிகளை அப்பகுதி மக்களோடு சேர்ந்து துவக்கி வைத்தார். தங்கள் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ அருளுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி