இந்நிலையில் மீனா திடீரென வீட்டில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த தாய் அமுதா சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து மீனாவை மீட்டனர். இதுகுறித்து காரிப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பி.இ. படித்துள்ள மீனாவுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் உறவினர்களிடம் கூறியுள்ளார். திருமணம் ஆகி 5 மாதத்தில் இளம்பெண் இறந்ததால் சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்திவருகிறார்.