சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருமானூரில் அனிதா என்ற பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது கழுத்தில் காயம் இருந்ததால், இது தற்கொலை அல்ல என்றும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனிதாவின் தந்தை முருகன் வாழப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.