ஏற்காடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சந்துரு (23). இரண்டு நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரம் மதுபோதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சந்துரு தனது தந்தையை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம், கத்தியால் சந்துருவை குத்தினார். இதில் காயம் அடைந்த சந்துருவை குடும்பத்தினர் மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.