சேலம் வீராணம் அருகே குப்பனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த சின்னசாமி (65) என்பவர் நேற்று சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை மீட்ட பொதுமக்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.