சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இது தவிர குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இந்த விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மலரஞ்சலி செலுத்தினர். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் திரளான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு விமான விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி