சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி ஏரிப்புதூர் பகுதியில் நேற்று (மே 18) காலை முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. பொதுமக்கள் பார்த்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. குழந்தையை மீட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையை வீசி சென்றது யார், தகாத உறவால் பிறந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.