சேலம் காரிப்பட்டி அருகே கூட்டாத்துப்பட்டியில், விவசாய நிலத்திற்கு சென்ற தென்றல் (22) என்பவர், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூன்று பேரை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தென்றலை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தென்றலின் புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.