நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 23). வழக்கு ஒன்றுக்காக நெல்லை கோர்ட்டுக்கு கடந்த 20-ந்தேதி வந்தார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், கோர்ட்டு முன்பு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 24) முதல் ஏற்காட்டில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் 2 போலீசார் கையில் துப்பாக்கியுடன் நீதிமன்றம் செயல்படும் நேரத்தில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.