ஏற்காடு: திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

ஏற்காடு அருகே தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (26) என்பவர், வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகாத விரக்தியில் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி