ஏற்காடு மலைப்பாதையில் ஸ்கேட்டிங் பயணம் செய்த வெளிநாட்டவர்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 20 கொண்டை ஊசிகள் கொண்ட மலைப்பாதையில் வெளிநாட்டவர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மற்ற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி