தரம் குறைவான மருந்து தயாரித்த கம்பெனிககு ரூ.75 ஆயிரம் அபராதம்

தரம் குறைந்த மருந்தை தயாரித்த தனியார் மருந்து கம்பெனி நிர்வாகிகளுக்கு ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது.சேலம் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். மருந்து, மாத்திரைகளின் தரத்தை அறிய மருந்துகளின் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

அதன்படி, சேலம் டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு அலர்ஜிக்கு பயன்படுத்தப்படும் மருந்தின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், அந்த மருந்தின் தரம் குறைந்தது என கண்டறியப்பட்டது. இதையடுத்து சேலம் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்தை தயாரித்த மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், தரம் குறைந்த மருந்தை தயாரித்த தனியார் மருந்து கம்பெனியின் நிர்வாக இயக்குனர் பர்வேஸ் சாவ்லா, பொது மேலாளர் பிரதீப் சோனிக்கு ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி