சேலம்: சரக்கு வாகனம் மரத்தில் மோதி 7 மாத கர்ப்பிணி பலி

திருப்பூரை சேர்ந்த வெங்கடேசன் அதே பகுதியில் சிமெண்ட் இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சினேகா (26) தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். அவர்கள் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் வீடு கட்டி குடியேற வீட்டு உபயோகப் பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.

வெங்கடேசன் வாகனத்தை ஓட்டி சென்றார். நேற்று(அக்.31) அதிகாலை சேலம் மாவட்டம் வளசையூர் அருகே அரூர் நெடுஞ்சாலையில் சென்ற போது தூக்கத்தில் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வாகனத்தை மோதினார். இதில் அவரது மனைவி சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி