ஜோதாராம், அவருடைய மனைவி ஜோஹிதேவி, மகள் அம்யா மற்றும் உறவினர்கள் ஜோஹாராம் (60), இவருடைய மனைவி மற்றொரு ஜோஹிதேவி (55), ஜோஹாராமின் தம்பி ரோனாராம் (52), இவருடைய மனைவி சோட்கி (50) ஆகிய 7 பேரும் நேற்று ஒரு சொகுசு காரில் ஈரோட்டில் வசித்து வரும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்தனர்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு ஈரோடு நோக்கி வாழப்பாடி வழியாக காரில் வந்தனர். காரை ஜோஹாராம் (60) ஓட்டி வந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் மேம்பாலத்தில் கார் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் ஜோதாராமின் மனைவி ஜோஹிதேவி, காரை ஓட்டி வந்த ஜோஹாராம் (60), ரோனாராம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மீதமுள்ள 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.