அப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் நுழைந்த 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கொல்லப்பட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 50), வட்டக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்மணி (37), குப்புசாமி (62) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற அவர்களுக்கு மொத்தமாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி உத்தரவிட்டார்.