சேலம் வாழப்பாடி அருகே காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சேசன்சாவடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.