சேலம் கிச்சிபாளையத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

சேலம் கருப்பூர் சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வீராசாமியின் மனைவி கோமதி (41), கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவில் வசித்து வந்தார். வீடு வீடாக சென்று சமையல் வேலை செய்து வந்த இவர், நேற்று காலை வீட்டில் வாட்டர் ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் போட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி