சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் அசோக் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் கட்டிட பேரிடர் காலங்களில் மருத்துவ உதவி மற்றும் மருத்துவ தயார் நிலைகள் குறித்த நேரடி செயல்முறை விளக்க நிகழ்வு கல்லூரி மாணவர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மாணவர்கள் கல்லூரியின் நூலகத்துக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். தொடர்ந்து அவசர மருத்துவம் சார்ந்த புத்தகமும் வெளியிடப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பாளர் அஜித்குமார், உதவி பேராசிரியர்கள் அருண்குமார், ஜெகன் ஆகியோர் செய்திருந்தனர்.